ஜெ
சமீபத்தில் தீரன்
சினிமாவையும் அதன்பின்னர் தமிழகக் காவலர் பெரியபாண்டியன் கொல்லப்பட்ட செய்தியையும்
வாசித்துக்கொண்டிருந்தேன். காண்டீபத்தை கூடவே வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் ராஜஸ்தானும்
கட்ச் பகுதியும் இணையும் பகுதியில் நிகழும் கொள்ளைகளைப்பற்ரி விரிவாக எழுதியிருந்ததையும்
ரைவதமலையைக் காப்பதற்காக நிகழும் போர்களையும் வாசித்தேன். கொள்ளை அங்கே ஒரு வாழ்க்கைமுறையாகவே
இருப்பதை வாசித்தபோது பிரமிப்பாக இருந்தது. மகாபாரதக் காலம்முதல் எதுவுமே மாரவில்லை
என்ற எண்ணம் வந்தது. ஆனால் உண்மையில் மகாபாரதக்காலம் முதல் இந்தியாவின் பெரும்பகுதியில்
பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை என்ருதான் தோன்றுகிறது
சிவா