அன்புடன் ஆசிரியருக்கு
குருதிச்சாரலில் தொடக்க அத்தியாயங்களே உச்சவிசை கொண்டுள்ளன. மனித உள்ளத்தில் அப்படி என்ன தான் உள்ளது?
தேவிகையை மைந்தர் துயரா இயக்குகிறது? உண்மையில் பூரிசிரவஸை மீண்டும் காண வேண்டும் என்ற அவளது விழைவு எப்படியெல்லாம் வளர்ந்து எழுகிறது! எவ்வளவு நுண்ணிய அகநாடகம். திரௌபதியை வெல்ல முடியவில்லை என்ற துயர் மைந்தர் துயர் எனும் உயர்நிலையைச் சூடி என்னென்ன பேச வைக்கிறது அவளை. உண்மையில் துயரென்பது ஒவ்வொருவரும் தனக்காக அடைவது மட்டும் தான் போலும். தன்னுடைய சிறுமைகளால் வென்றோர் முன் ஒடுங்கி நிற்பவர்கள் அடையும் துயர் கடுமையனதாகவே இருக்கும். அதை மைந்தர் துயரென மாற்றிக் கொள்வதில் ஒன்றும் தவறில்லை தான். எவ்வளவு அக்கறை கொண்ட சொற்கள். ஆனால் அவையனைத்தும் திரௌபதியை வென்று நிற்கும் தருணத்திற்கென. நாகம் களிற்றை தீண்டி அசைவிழக்கச் செய்வது என்று சொல்லலாமா?
அன்புடன்
சுரேஷ் பிரதீப்