Tuesday, December 19, 2017

புண்டரீகம்



ஜெ,

குருஷேத்ரத்தில் இப்படி ஒரு நீர்நிலை இருப்பது மகாபாரதத்தில் இருக்கிறதா என்ன? புண்டரீகம் என்றால் தாமரை. அல்லது தாமரையின் நடுவே உள்ள மலர்ப்பீடம். அதாவது புல்லிவட்டம். புண்டரீகை என்றால் இலட்சுமி. அப்படி ஒரு குளம் அங்கே இருப்பது மகாபாரதத்தில் இருக்குமென்றால் அதைக் கண்டுபிடித்தது ஆச்சரியம்தான். கொலைபூமியில் லட்சுமி என்பதே விந்தையாக உள்ளது

சுவாமி

அன்புள்ள சுவாமி அவர்களுக்கு,

மகாபாரதத்தில் சிறுகுறிப்பாக வந்துசெல்கிறது இந்த நீர்நிலை


ஜெ