ஜெ இன்று வெண்முரசு நாவலில்
முதற்கனலை வாசித்துக்கொண்டிருந்தேன். இந்தவரிகளைப் படித்தபோது மிகப்பெரிய மன எழுச்சி
ஏற்பட்டது. ஆரம்பம் முதலே வெண்முரசு பெண்களின் அறத்தின் மேல் பெருநகரங்கள் கட்டப்பட்டிருப்பதைத்தான்
சொல்லிக்கொண்டிருக்கிறது. சௌபநாட்டை பெண் விலகுவதென்பது எவ்வளவுபெரிய சாபம்! அதே கதை
அஸ்தினபுரிக்கும் நிகழ்கிறது. பாஞ்சாலி அந்நகர் விட்டு நீங்கியபின் அது மேலெழவேயில்லை
சந்திரகுமார்