ஜெ
வெண்முரசின் உள்ளடக்கத்தில்
மெல்லமெல்ல உருவாகி வருவது ஒவ்வொருவரும் வெவ்வேறு தத்துவத்தால் கட்டுண்டிருக்கிறார்கள்
என்பது. வெண்முரசிலேயே ஒரு நல்ல உவமை வருகிறது. நதியைப்பார்க்காமல் அதில் மிதந்துசெல்லும்
சருகுகளைப்பார்த்தால் அவை தனித்தனியாகச் செல்வதுபோலத்தான் தோன்றும். நாகவேதம் அசுரவேதம்
நால்வேதம் நாராயணவேதம் என்று பலவகையான தரிசனங்கள்தான் மோதிக்கொள்கின்றன. மனிதர்கள்
அதில் வெளியே தெரியும் முகங்கள், அவ்வளவுதான்
சிவக்குமார்