ஜெயமோகன் அவர்களுக்கு
இன்று வந்த வெண்முரசு பகுதி மிகச்சிறப்பானது. வழக்கமாக நீங்கள் வெண்முரசிலே
ஒரு நாயகி அல்லது நாயகன் என்றால் அவனுக்கு அல்லது அவளுக்கு ஆல்டர் ஈகோ போலவே சேடியையோ
தோழனையோ படைப்பீர்கள். அவன் இவனுடைய உள்ளத்தைப்பிரதிபலிப்பான். அவனே இவனை ஆராயவும்
செய்யக்கூடும். அந்த உரையாடல் வழியாகவே கதாபாத்திரங்களின் ஆழம் வெளிப்படும்
தேவிகையின் இரு சேடியரில் ஒருத்தி மூத்தவள். அவள் கொஞ்சம் முதிர்ச்சியாகப்பேசுகிறாள்.
சமாதானம் செய்கிறாள். ஆனால் மனங்களையும் அறிந்திருக்கிறாள். இரண்டாம்தோழி சின்னவள்.
பாதிநேரம் தூங்கிக்கொண்டிருக்கிறாள். விழித்தெழுந்தால் கூர்மையாக உண்மைகளைச் சொல்கிறால்.
ஒருத்தி கான்ஷியஸ். இன்னொருத்தி சப்கான்ஷியஸ். அப்படி நான் வாசித்தேன்
சரவணன்