அன்புள்ள ஜெ
மீண்டும் அஸ்தினபுரியின் மாபெரும் மன்றாட்டுகள். எப்படியாவது போரைத்தவிர்க்கவேண்டும்
என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் முயல்கிறார்கள். போர் நிகழ்ந்தேதீரும் என நாம்
அறிந்திருக்கிறோம். ஆகவே அந்த முயற்சிகள் எல்லாமே வெறும் மனித யத்தனங்கள் என்றுதான்
தோன்றுகிறது. அவர்கள் அனைவர்மேலும் ஆழ்மான அனுதாபத்தையே உருவாக்குகிறது. மனிதர்கள்
என்ன செய்தாலும் இவை எல்லாம் நடந்தே தீரும். ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம்
இருக்கிறது. ஒவ்வொரு உணர்ச்சி இருக்கிறது. ஆச்சரியம் என்னவென்றால் இப்படி வாசிக்கையில்
இவர்கள் செய்வதெல்லாமே போரை விரைவுபடுத்துவதற்காகத்தான் என்ற எண்ணம் வலுவாக உருவாகிறது.
தேவிகை அசலை பூரிசிரவஸ் அனைவரும் செய்வது போரைக்கொண்டுவரும் முயற்சியைத்தான் இல்லையா?
மகாதேவன்