Friday, December 29, 2017

இரண்டு கோணங்கள்



ஜெ

வெண்முரசிலே எப்போதும் என்னைக்கவரும் அம்சம் ஒன்று உண்டு. பல நுட்பமான உளவியல் அம்சங்களைப்பற்றிப் பேசிக்கொண்டிருப்பவர்கள் இரண்டுவகையினர். ஒருவர் ஒரு கோணத்திலும் இன்னொருவர் இன்னொரு கோணத்திலும் அதைப்பார்ப்பார்கள். ஒரு நிகழ்ச்சிக்குப்பின்னரோ அல்லது ஒருவரை பற்றி விவாதிக்கும்போதோ ஓர் அத்தியாயம் முழுக்க இப்படி ஒரு உரையாடல் நீண்டுவளர்வதைக் கானலாம். அதை உரையாடலாகக் கொண்டு அப்படியே கடக்காமல் இரண்டு வெவ்வேறுபார்வைகள் என்று எடுத்துக்கொண்டால் அதிலுள்ள நுட்பங்கள் ஆச்சரியப்படுத்தும்தன்மைகொண்டிருக்கும். 

உதாரணமாக பீஷ்மரை சந்தித்துவிட்டு அசலை, காந்தாரி இருவரும் வருகிறார்கள். இருவரின் மனநிலையும் வேறுவேறு. காந்தாரி கொஞ்சம் எம்பதியோடு பீஷ்மரைப்புரிந்துகொள்ள முயற்சிசெய்கிறாள். அவரை அணுக்கமாக அணுகிச்சென்று தன்னைவைத்துப் புரிந்துகொள்கிறாள். ஆனால் அசலை எதிர்நிலை எடுத்து அறுவைசிகிச்சைக் கத்தியின் கூர்மையுடன் ஆராய்கிறாள். இரண்டுமே சமம்தான். இரண்டும் இரண்டு பீஷ்மர்களை நமக்குக் காட்டுகின்றன. இப்படி ஒவ்வொரு சிறுதருணமும் பலவாக ஆராய்ந்து பலகோணங்களில் பேசப்படுவதே வெண்முரசின் காப்பியத்தன்மையின் அடிப்படையாக உள்ளது


மனோகர்