Sunday, December 31, 2017

தன்னுரைகள்



அன்புள்ள ஜெ

வெண்முரசின் இந்நாவலில் மனவியல் அம்சங்கள் அதிகம். மனதையே நவீன இலக்கியம் எழுதமுயன்றிருக்கிறது. டோஸ்டெயெவ்ஸ்கி அதை டிரமாட்டிக் மனலாக் வழியாகச் சொன்னவர். பிறகு நிறைய முயற்சிகள் வந்தன. ஸ்டிரீம் ஆஃப் கான்ஷியஸ்நெஸ் போல. எல்லாமே இந்நாவலில் நீங்கள் மீண்டும் டோஸ்டெயெவ்ஸ்கியிடம் சென்றிருக்கிறீர்கள். குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்களில் வருவதுபோல நீண்ட தன்னுரைகள். மறுவிளக்கங்கள். ஒரு கதாபாத்திரத்தை இன்னொன்று ஆழமாக ஆராய்வது. அந்த புனைவு உத்தி இது பழையபாணி கிளாசிக்கல் கதை என்பதனால் நன்றாகவே பொருந்துகிறது. ஒரு சபையில் அசலை பேசும்போது ஓக்கே என்று தோன்றுகிறது. அதையே ஒரு ஆபீஸில் ஒருவர் பேசினால் பொருந்தாமலிருக்கும் என நினைக்கிறேன். இங்கே வெளிப்படும் மனநாடகங்களும் நுட்பங்களும்தான் இதை சிறந்த இலக்கியப்படைப்பாக ஆக்குகின்றன


ராம்குமார்