அரசியல் ரீதியாக துரியோதனனின் படைப்புறப்பாடு ஜராசந்தன் மற்றும் சிசுபாலனின் கொலைகளின் காரணமாகவே நிகழ்கிறது. அதற்கு மாற்றாகவே நிகரிப்போரான சூதுக்களம் அமைகிறது. உண்மையில் துகிலுரிதல் நிகழ்வு மகாபாரத மூலத்தில் கிடையாது. ஆனால் நம் மரபிலக்கியங்களில் உச்ச தருணங்களில் ஒன்று அது. சீதையின் எரிபுகுதலும் கண்ணகியின் நகர் எரிப்பும் பிற உச்சங்கள். பன்னிரு படைக்களம் இந்த அக இயக்கத்தையே கணக்கில் கொள்கிறது. வெல்ல முடியாத நிமிர்வு கொண்டவளாகவே திரௌபதி வெண்முரசில் சித்தரிக்கப்படுகிறாள். அவளை அச்சபைக்கு இழுக்கும் வரை துரியனின் கர்ணணின் ஆணவம் நேர்நிலையென்றே பொருள் கொள்கிறது. அவர்கள் எல்லை மீறுவது அச்சம்பவத்தில் தான்
சுரேஷ் பிரதீப் மதிப்புரை