ஜெ,
மூன்று தனித்தனி ஓடைகளாக போரின் காரணங்கள் ஆரம்பம்
முதலே வந்துகொண்டிருப்பதை இப்போது பார்க்கிறேன். ஒருகாரணம் அதன் அரசியல்.
அதை ஆரம்பத்திலேயே விதுரன் சொல்லிவிட்டான். பழைய அமைப்புக்கும் உருவாகிவரும் புதிய
அமைப்புக்குமானபோர். பொன்னுக்கும் இரும்புக்குமான போர் என்று அதை பீஷ்மர் சொல்கிறார்.
முதலாம் உலகப்போரை நிலக்கரிக்கும் விறகுக்குமான போர் என்பார்கள். அதைப்போல
இரண்டாவது ஓடையாக பாண்டுவுக்கும் திருதராஷ்டிரனுக்கும்
இடையேயான பூசல், பீமனுக்கும் துரியோதனனுக்குமான அவநம்பிக்கை என்று குலப்பூசல் படிப்படியாக
உருவாகி வரும் சித்திரம் உள்ளது
மூன்றாவது ஓடை ஐடியாலஜிகளின் போர். அது ஆரம்பத்தில்
ஆஸ்திகன் கிளம்பிவரும்போதே நிகழ்ந்துவிட்டது. அதன்பின் வண்ணக்கடலில் அசுரர்குலச்சரித்திரம்
வழியாக விரிவாக வருகிறது. இப்போது உச்சம் அடைந்துள்ளது
ராஜசேகர்