ஜெ
காண்டீபத்தில் வரும் ஐந்து முதலைகளின்கதையை இன்று கைபோன போக்கில் புரட்டியபோது வாசிக்கநேர்ந்தது. எவ்வளவு அழகான எத்தனை கூர்மையான
உருவகக் கதை என்ற வியப்பை அடைந்தேன். மகாபாரதத்தில் அந்தக்கதையை தேடி வாசித்தேன். அதில்
ஒரு சாதாரணமான உருவகக்கதை அது. ஒரு பழைமையான கதை. அதில் தத்துவம் இல்லை. ஒரு கதையின்
சாத்தியங்கள்தான் உள்ளன. அதை தத்துவமாக விரிக்கலாமென்பது உங்கள் வாசிப்பு
அது உருவகிக்கும் அனைத்து அம்சங்களையும் விரிவுபடுத்தி
நவீன முறையில் விரிவாக்கம் செய்த வடிவத்தை வாசித்தபோதுதான் அந்தக்கதையின் சாத்தியங்கள்
என்ன என்று புரிந்தது. ஐந்து தேவகன்னியரும் பொன்னாலும் நிறையாமல் நிழல்கொண்டிருந்தனர்
என ஆரம்பித்து மெய்மைதேடி அவர்கள் நிறைவுகொள்வதும் அவர்கள் அர்ஜுனனை ஐந்து முதலைகளாக
மறிப்பதும் நினைக்கநினைக்க விரிகின்றன.
அர்ஜுனனுக்கு அவை காட்டும் மாயக்காட்சிகள்
அளிக்கும் மகாபாரததர்சனம் வேறு ஒரு தனிக்கதை. இத்தனைசெறிவாக இக்கதை இருப்பதனால் இதை
பலரும் அப்படியே கடந்துசென்றுவிட்டார்கள் என நினைக்கிறேன்
ராஜம்