ஜெ
பன்னிரு படைக்களத்தில்
வரும் இந்த வரியை நினைவுகூர்ந்தேன். சரியாக ஞாபகம் வரவில்லை. வரிகளை ஞாபகம் வைக்கவேண்டும்
என்பதற்காக நான் குறித்து வைப்பதுண்டு. கட் பேஸ்ட் செய்து ஒரு தனி ஃபைலாக வைத்திருப்பேன்.
அதை ஒட்டி தேடினால்தான் அந்த அத்தியாயத்தைக் கண்டுபிடிக்கமுடியும்.
நான் வெல்ல எண்ணுவது மண்ணை அல்ல, தந்தையே. புகழையும் அல்ல. இவ்விழிகளைத்தான். உளம் அமைந்த நாள்முதலாக நான் கண்டுவரும் இந்த நச்சு விழிகளின் முன் தலைதருக்கி எழுந்து நிற்கவிரும்புகிறேன். பாரதவர்ஷத்தை முழுதாள விழைகிறேன் என்றால் அது பாரதவர்ஷமே என்னை வெறுக்கிறதென்பதனால்தான்
துரியோதனன் சொல்லும் இந்த வரியிலிருந்து முழுமையாகவே அவனைப்புரிந்துகொள்ளமுடிகிறது.
மகாபாரதத்தின் சிக்கல்களுக்கான key இந்த வரியில் இருக்கிறது என நினைக்கிறேன்
செல்வராஜ்