Wednesday, December 6, 2017

எழுதழல் திரௌபதி



ஜெ

மிகக்குறைந்த சொற்களில் சொன்னால்கூட திரௌபதி எழுதழல் நாவல் முழுக்க கொண்டிருக்கும் ஆழமான மௌனம் ஒரு பதற்றத்தை அளிக்கிறது. அவள் உள்ளூர எப்படி உணர்கிறாள்? அவள் சபதம்போட்டுவிட்டுச் சென்றாள். இப்போது திரும்பிவந்திருக்கிறாள். கிருஷ்ணைக்கு அவள் அளித்த பட்டைத் திருப்பி அளிக்கிறாள். மற்றபடி எதுவுமே அவள் சொல்லவில்லை.

கிருஷ்ணன் உபப்பிலாவ்யத்திற்கு வந்தபோதுகூட அவளுக்கும் திரௌபதிக்கும் நடுவே பேச்சு ஒன்றும் நடக்கவில்லை. அவள் என்ன ஆவாள் என்ற கேள்வி எழுந்ததும் மாயையை காட்டி நாவலை முடித்துவிட்டீர்கள். அவள் அன்னைவடிவமாக இருக்கவேண்டும் என்பதே என் ஆசை. ஆனால் மகாபாரதக்கதை வேறுவகையில் செல்கிறது. ஒன்றும் செய்வதற்குமில்லை

சாரதி