ஜெ
மாயையின் கதாபாத்திரத்தை
வாசிக்கும்போது நீங்கள் எழுதிய உற்றுநோக்கும்பறவை கதை ஞாபகம் வந்தது. அது துவாத்மர்களைப்
பற்றிய கதை. துவாத்மர்கள் இரட்டைநிலை கொண்டவர்கள். துவாத்மர்கள் தங்களை இரண்டாக ஆக்கிக்கொண்டார்கள்.
ஒரு நிலையில் அவர்கள் தங்கள் உள்ளத்திலுள்ள அனைத்து கெட்ட தன்மையையும் தொகுத்து வெளிப்படுத்துகிறார்கள்.
ஆகவே மறுநிலையில் அவர்களால் மிக எளிதாக உச்சங்களை சென்றடைந்து ஞானிகளாக ஆக முடிகிறது.
திரௌபதி இப்போது கருணையும் அன்பும் நிறைந்தவளாக இருக்கிறாள். எவர்மீதும் வஞ்சம் இல்லை.
ஏனென்றால் அவளுடைய எல்லா வஞ்சமும் மாயையிடம் இருக்கிறது. அவளிடம் அதை அளித்துவிட்டு
இவள் உயர்ந்தவளாக ஆகிவிடுகிறாள். இந்த இரட்டைநிலை தான் இங்கே வெளிப்படுகிறது
சிவா