அன்புள்ள ஜெ
மாயைக்கும் திரௌபதிக்குமான உறவை இந்த
அத்தியாயத்தில்தான் முழுதாக உள்வாங்கிக்கொண்டேன். தீயில் விழுந்து மாயை மறைய இவள்
மாயை ஆகிறாள். அவள் குருதிவெறிகொண்டவள். அவள் திரௌபதியின் வடிவமும்கூட. அவள்
மறைவது இவளில் எழுவதற்காகத்தான்
இப்போது பன்னிருபடைக்களத்தை வாசிக்கையில் ஒரு விஷயம்
பிடிகிடைத்தது. மிகச்சரியாக ரக்தபீஜனின் கதையுடன் இது இணைகிறது. ரக்தபீஜனைக் கொல்ல
தேவி இரண்டாகப்பிரிகிறாள். ஒரு பிடாரி அவன் ரத்தத்தைக் குடிக்கிறது.
பன்னிருபடைக்களத்தின் இறுதியில் அதேபோல திரௌபதி இரண்டாகப்பிரிகிறாள். ஒருபகுதி
மாயை என்ற பிடாரி. அது இப்போது மறைந்து இரண்டு வடிவையும் தேவியே
எடுத்துக்கொள்கிறாள்
ஜெயராமன்