ஜெ
பால்ஹிகரின் வருகை உற்சாகமான வாசிப்பனுபவமாக இருந்தது.
அவர் வந்த இடத்தில் எதையுமே அடையாளம் காணாமலிருப்பதும் உதிரி உதிரியாக சில விஷயங்கள்
ஞாபகத்துக்கு வருவதும் இயல்பானவை. ஞாபகங்கள் இல்லாமலிருப்பதனால்தான் அவருக்கு நீண்ட
ஆயுள். ஆகவே அஸ்தினபுரியிலும் அவர் எதையுமே புதிதாகப் பார்க்கப்போவதில்லை. அன்றன்றைய
யதார்த்தத்திலேயே அப்படியே வாழப்போகிறார் என நினைக்கிறேன். அதுதான் அந்தக்கதாபாத்திரத்தின்
இயல்புக்கு ஒத்துவரும். அவர் ஒரு மிதந்துசெல்லும் கட்டை. அவருக்கு நேற்றும் நாளையும்
கிடையாது. எப்போதும் நிகழ்காலத்திலேயே இருக்கிறார். ஏனென்றால் அவர் உண்மையில் மூதாதையர்
வாழும் ஃபுவர்லோகத்திலே இருக்கிறார். அவரை அவர்கள்தான் இறந்தகாலமாகப் பார்க்கிறார்கள்
மோகன்தாஸ்