Saturday, June 16, 2018

மூன்று இடங்கள்



ஜெ

சுஃப்ரையை சந்திக்கும் திருஷ்டதுய்ம்னனின் உரையாடல் நுட்பமான ஒரு தருணம். ஒரு சின்ன அத்தியாயம் அதற்குள் மூன்று வெவ்வேறு உணர்வுநிலைகள் வந்துசெல்கின்றன. சுஃப்ரை ஆணுக்கு அர்ப்பணிப்பதன் வழியாக அவள் அடையும் மீடபைப் பற்றிச் சொல்லும் இடம்.  அந்த ஆண் அவளுக்கு ஒரு உருவகம் மட்டும்தான். நிஜமானவன் அவளுக்குப் பொருட்டு அல்ல.

அதேபோல துருபதனின் வஞ்சம் அணையாமலிருப்பதைப்பற்றிய இடம். மாயையின் வஞ்சத்திலிருந்து அத்தியாயம் நேராக துருபதனை நோக்கிச் செல்லும்போதுதான் ஒரு யூனிட்டி அமைகிறது

அதோடு திருஷ்டதுய்ம்னன் ஒரு தந்தையாக தன் மகள் மணம்முடித்துச்செல்லும்போது அடையும் நுட்பமான இழப்பு. அதுவும் ஒரு பெரிய மனோவியல் அம்சம்

மனோகரன்