ஜெ
அஸ்தினபுரியில் உச்சகட்டப் போர் ஏற்பாடுகள் நடக்கின்றன. பெரிய ஏற்பாடுகள் செய்து செய்து ஓய்ந்து கடைசியில் மிஷனரி அதன் வேலையை அதுவே செய்யட்டும் என்று நாம் விட்டுவிடுவோம். நான் சில மாநாடுகளை ஒருங்கிணைத்திருக்கிறேன். பெரிய மாநாடுகளை ஆரம்பம் முதல் திட்டமிட்டு துல்லியமாக நடத்துவோம். ஒருகட்டத்தில் அப்படியே விட்டுவிடவேண்டியதுதான். கனகர் போல புத்தி ஸ்தம்பித்துவிடும். அவரவர் அவரவர் வேலையை ஒருவாறாகப் புரிந்துகொண்டு அதற்குப் பழகிவிட்டிருப்பதனால் அவர்கள் அதையெல்லாம் தானாகவே செய்வார்கள் ஆகவே வேலைகள் ஒருவாறாக நடக்கும். எந்தச்சிக்கலும் நடக்காது. நாம் ஒரு மிஷின் மேலே ஏறிக்கொண்டு அதுவே கொண்டுசெல்வதுபோலவே இருக்கும். அந்த நிலையை அழகாகக் காட்டியிருக்கிறது இன்றைய வெண்முரசு. இதைப்போன்ற நிலைகளையெல்லாம் புனைவில் பார்ப்பதே இங்கே அரிதாக இருக்கிறது
சண்முகம்