ஜெ
இந்த நாவலில் இரண்டுவகையான
பெருந்தந்தைகள் வருகிறார்கள் என நினைக்கிறேன். இரண்டுவகையான பேருடலர்கள். ஒருவகை பால்ஹிகர்.
இன்னொரு
வகை திருதராஷ்டிரர். திருதராஷ்டிரர் வகை பெருந்தந்தைதான் முன்பு வெய்யோனில் வந்த தீர்க்கதமஸ்.
அவர் காமம் மட்டுமே கொண்டவர். கண்ணில்லாதவர். இருட்டில் வாழ்பவர். அங்கே இருந்து குழந்தைகளை
உற்பத்திசெய்துகொண்டே இருக்கிறார். மண்ணுக்குள் இருந்து குழந்தைகளை பிறப்பிக்கிற தவளைபோல.
பால்ஹிகர் மலைமேல் விண்ணில் இருக்கிறார். வெண்ணிறம். கண்கள் கொண்டவர். அமுதை உண்பவர்.
தீர்க்கதமஸுக்கு காமம் மட்டும்தான். இவருக்கு தூய்மையான ஆற்றல். இரு பிதாமகர்களையும்
ஒப்பிடுவது பல திறப்புகளை அளிப்பதாக உள்ளது
மனோகரன்