ஜெ
நாம்
லடாக் போன்ற வித்தியாசமான ஊர்களுக்குச் செல்லும்போது ஒரு மனக்கிளர்ச்சி உருவாகிறது.
அந்த ஊர் அப்படியே மாறாமலிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. அந்த ஊரும் வளர்ந்து மாறிக்கொண்டிருக்கும்
என்றும் அங்குள்ள மக்களுக்கும் வளர்ச்சி தேவையாகிறது என்றும் நினைக்கமாட்டோம். அதேபோலத்தான்
பால்ஹிகநாட்டை வெண்முகில்நகரத்தில் படித்தபோது ஒரு பெரிய கனவுபோல அது இருந்தது. அது
சிந்துவின் துணைநதியிலிருந்து படிப்படியாகச் செல்லும் மலைமேல் ஏறி அப்பால் சென்றால்
மலைகள் சூழ்ந்த ஒரு குழிக்குள் ஓர் ஆற்றின் கரையில் அமைந்த நகரம். தூசி நிறைந்தது.
இடுங்கலான தெருக்கள் கொண்டது. மழைபெய்தால் பெரிய கொண்டாட்டமாக இருக்கும். இதெல்லாம்
நினைவில் நிற்கிறது. ஆனால் இப்போது அந்த ஊருக்கு மிகப்பெரிய சாலை வந்துவிட்டது. வணிகம்
வந்துவிட்டது. மக்கள் மாறிவிட்டிருக்கிறார்கள். அந்த மாற்றம் இயல்பானது. ஆனால் மனசு
ஏற்க மறுக்கிறது. இந்த மாற்ரம் நிகழ்வது மகாபாரதக் காலகட்டதிலே என்று நினைக்கையில்
வேடிக்கையாகவும் இருக்கிறது. ஒரு கனவுபூமி அந்த சின்ன ஊர். பூரிசிரவஸ் நமக்குப்பிடித்துப்போவதற்குக்
காரணமும் அவன் வாழும் அந்த ஊர்தான்
ஜெயராமன்