ஜெ
பிரேமை வாழும்
மலைப்பகுதிகளைப்பற்றி பல்வேறு கோணங்களில் சொல்லி அங்கிருக்கும் காலமற்ற தன்மையைச் சொல்கிறீர்கள்.
அங்கே ஓசையே இல்லை. ஓசைதான் பொழுதைக் காட்டிக்கொண்டிருக்கிறது. சொல்லப்போனால் ஓசைதான்
காலம். அங்கே வெளிச்சம் மாறாமலிருக்கிறது. இரவிலும் வெளிச்சமிருக்கிறது. அதுவும் அங்கே
காலம் அணுகாமல் ஆக்கிவிடுகிறது. அங்கே காலம் மனமாக உள்ளது. ஒன்றுமே நிகழ்வதில்லை. அதை
அப்படியே விட்டுவிடுபவர்களுக்கு காலம் இல்லை. ஆனால் ஜம்பா அதைச் சொல்லிக்கொண்டே இருக்கிறான்.
பெருக்குகிறான். ஆகவே அவனுக்கு மட்டும் வயதாகிவிடும் என நினைக்கிறேன்
சபரிகிரிநாதன்