அன்புள்ள ஜெ
திருதராஷ்டிரர் கடைசிக்கணம் வரை போரிலிருந்து பின்வாங்கவும் போரை நிறுத்தவும்
துடிப்பவராகவே வெண்முரசில் வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே அவருடைய குணாதிசயம் அப்படித்தான்
வெண்முரசில் வருகிறது. தன் பிள்ளைகள் மேல் அவருக்கு ஒருபடி மேல் அன்புண்டு. கடைசியில்
அங்கேதான் சாய்வார். ஆனால் அது சப்கான்ஷியஸ் தளத்தில்தான். நினைத்து அவர் செய்வதில்லை.
அவர் அறிந்தவரை அவருக்கு தருமனும் துரியனும் சமானம்தான். தன் தம்பி பிள்ளைகள் வாழவேண்டும்
என்றுதான் அவர் நினைக்கிறார். அவர் கடைசிவரை முயற்சி செய்கிறார். கடைசி முயர்சிதான்
மூதாதையாகிய பால்ஹிகர்மேல் பொறுப்பை ஏற்றிவிடுவது. அவருக்கு வேறுவழியில்லை. ஆனால் அதெல்லாம்
ஒரு பாவனைதான், உண்மையில் அதெல்லாம் நடக்காது என்று அவருடைய ஆழ்மனசுக்குத்தெரிந்துதான்
இருக்கும்
செந்தில்குமார்