ஜெ
போருக்கு முந்தைய
காலகட்டம் ஆதலால் போரையே வாசகர்களாகிய நாங்களும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனாலும்
கதையின் ஓட்டத்தில் முக்கியமான பல இடங்கள் வாசித்து முடித்தபின்னர் நினைவில் நீடிக்கின்றன.
ஒரு நாடு பெரியநாடாக வளர்கிறது. அப்போது அங்கே அரசகுடியினரும் ஷத்ரியகுடியினரும் உருவாகிறார்கள்.
ஷத்ரியகுடியினருக்கு மரபு ஏராளமான சலுகைகளை அளிக்கிறது. கூடவே அவர்களுக்கு அதற்கான
பொறுப்புகளும் அளிக்கப்படுகின்றன. பொறுப்புகள் அளிக்கப்படுகையில் அவர்கள் அதை மறுக்கமுடியாது.
புதிதாக உருவாகி வரும் பால்ஹிகநாடு முதலியவர்களுக்கு அதெல்லாம் புரிவதில்லை. அவர்கள்
சுகசௌகரியங்களை அனுபவிக்கிறார்கள். அப்போது அரசகுடியினராகவே உணர்கிறார்கள். போர் என்று
வரும்போது பழங்குடியினரைப்போல பின்வாங்கி ஓலமிடுகிறார்கள். ஒரு மலைநாடு மெல்ல மெல்ல
போர்ச்சூழலுக்கும் ஷத்ரியக்கட்டுமானத்துக்கும் வருவதன் சித்திரத்தை பூரிசிரவசின் இப்பகுதிகளில்
காணமுடிகிறது
மனோகரன்