ஜெ
திருதராஷ்டிரர் போர் கண்முன் வந்துவிட்ட பின்னாடியும்கூட கனவு காணும் இடம் என்னை
நெகிழச்செய்துவிட்டது. அவருடைய பிள்ளைகளும் தம்பி பிள்ளைகளும் ஒன்றாகச் சேர்ந்து விளையாடுவதை
அவர் கற்பனைசெய்கிறார். அந்த வரிகள் அவருடைய
மனசில் உள்ள ஏக்கத்தைக் காட்டுகின்றன. இது நம் இயல்பு. பிரிந்துபோனவர்கள் ஒருநாள் வந்துசேர்வர்கள்
என்று நம்பிக்கொண்டே இருப்போம். அதேபோல நோயில் சாகக்கிடப்பவர்கள்கூட் எல்லாம் சரியாகிவிடும்
எழுந்து அமர்ந்து எல்லாவற்றையும் செய்ய ஆரம்பிப்போம் நல்லகாலம் மீண்டும் வந்துவிடும்
என்றெல்லாம் நம்பி சொல்வதைப் பார்க்கிறேன். அவர்க்ளுக்க் மெய்யாகவே அந்நம்பிக்கை இருக்கிறதா
என்றால் கிடையாது. ஆனால் அதை அவர்களால் சொல்லாமலிருக்க முடியாது. அவ்வளவாவது நம்பிக்கை
இருந்தால்தானே உயிர்வாழவே முடியும்?
சிவக்குமார்