அன்புள்ள ஜெ
யாதவர்களும் மலைகுடிகளுமென புதிய வணிக சாத்தியங்களால் அரசுகள் அமைத்தவர்கள் தங்கள் தொல்குடி வழக்கங்கள் அளிக்கும் தளைகளை உதறிமுன்னேருவது தான் பேரரசாக உருப்பெருவதற்கான வழியென கண்டடைகின்றனர்.
யூமகேதனன் சொற்களில் அந்த உருமாற்றமே வெளிப்படுகிறது அன்னைவழிச் சமூகங்களனைத்தும் அந்த தொல் இயல்பை உதறியே அடுத்த நிலைக்குச் செல்ல முற்படுகிறது.
அன்னைவழிச்சமூகங்கள் ஒருவகையான தமோ குணம் கொண்டதாகவும்.தமஸிலிருந்து வென்றெடுகும் அற்றலான ரஜோ குணத்திற்கான பரினாமமே ஆண்கள் தலைமை கொண்ட ஷத்திரிய நிலையாகவும் உள்ளது.
தந்தை முதன்மை கொள்ளும் குடியாக நாம் மாறியாகவேண்டும் என்றும் களம்பட்டலும் நம்குடிக்கு தலைமை பொருப்பு மிக இயல்பிலேயே வந்தடையுமென யூமகேதனன் சொல்வதும் ரஜஸசிற்கான பரினாமமே என எண்ணுகிறேன்.
தங்கராஜ்