ஜெ
நேற்று வெளிவந்த ஏ வி மணிகண்டனின் கடிதம் எனக்கு மிகப்பெரிய ஒரு அதிர்வை உருவாக்கியது. அந்தக்கோணத்தில் நான் யோசிக்கவே இல்லை. பூரிசிரவசுக்கு இன்றைய வாழ்க்கை என்பதே கிடையாது. அவன் எதிர்காலத்துகாகவே வாழ்கிறான். பால்கிகபுரியை வல்லரசாக்குவது மட்டுமே அவனுடைய வாழ்க்கையின் இலட்சியம். அவன் தன் காதல்களையும் இளமையையும் அதற்காக இழந்திருக்கிறான். அவன் அடைந்தது ஒன்றுமில்லை. அவன் அடைவதெல்லாம் எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் பெயர் மட்டும்தான்
ஆனால் பால்கிகர் எதிகாலத்துக்காக ஒருகணமும் வாழவில்லை. நித்யமான நிகழ்காலத்தில் மட்டுமே அவர் வாழ்கிறார். அவருக்கு இன்று மட்டும்தான். அவர் எல்லாவற்றையுமே அடைந்திருக்கிறார். ஆகவே போர் என்பதே என்ன? எவராவது நிகழ்காலத்துக்காகவா போர்ச் செய்கிறார்கள். எல்லா போரும் எதிர்கால நன்மைக்காகவே. போஸ்டீரிட்டிதான் மனிதனைப்போட்டு ஆட்டுவிக்கிறது. அதிலிருந்து விடுதலைபெறுவது மட்டுமே உண்மையான விடுதலை அதுவே முக்தி.
பூரிசிரவஸ் போஸ்டீரிட்டி என்ற பற்றில் உழலும் ஆத்மா. பால்ஹிகர் அதிலிருந்து முக்தி பெற்ற ஆத்மா
மகேஷ்