ஜெ,
வெண்முரசில் "நிலைக்கோள்" என்ற சொல்லை எந்த பொருளில் பயன்படுத்துகிறீர்கள்?
1). "ஏனெனில் நிலைக்கோள் என்பதே பெண்டிர் இயல்பு."
- ‘செந்நா வேங்கை’ – 17
2). "நிலைக்கோள் பிறழ சற்று அசைந்து பின் ஒரு மரத்தை
பிடித்துக்கொண்டான்."
- ‘நீர்க்கோலம்’ – 51
3). "எல்லா நிலைகளிலும் நிலைபொருள் அது. எது நிலை, எது அதன்
நிலைக்கோள் என்று உணர்வதே வேதமெய்மை."
- ‘இமைக்கணம்’ - 42

நன்றி
கார்த்திகேயன்
அன்புள்ள கார்த்திகேயன்
கோள் என்ற சொல்லொட்டு கொள்ளுதல் என்னும் தொழில் பெயர்ச்சொல்லாக மாறுவது
நிலைகொள்ளுதல் என்னும் தொழில்தான் நிலைக்கோள் என்னும் பெயராக ஆகிறது. நிலைகொள்ளும்தகைமை,
நிலைகொண்டது என்று பொருள்
ஜெ