Wednesday, June 13, 2018

உப்பு




ஜெ

மாயை தீயில்தான் மறைந்தாகவேண்டும். ஏனென்றால் அவள் நிழல். அவள் ஒளியில் சென்று மூழ்குகிறாள். அவளுடைய குணாதிசயம் அவளை ஒரு கேரக்டராக அல்ல ஒரு ஐக்கான் ஆகவே நிலைநிறுத்துகிறது. ரக்தபோஜி அன்னையும் மாயையும் ஒன்றுதான். அவள் வந்து நிற்கும் காட்சியும் அந்த குருதிநெய்படிந்த கூந்தலே விறகாக மாற அவள் எரிந்தழிவதும் குரூரமான அழகியல்கொண்டவையாக அமைந்திருந்தன. போருக்கான அந்த வஞ்சம் அவளில் கூர்மைகொண்டு நின்றிருந்தது. ஒரு வஞ்சம் என்னதான் நிகழ்ந்தாலும் அழிவதில்லை. அது பேய், இக்கால கம்ப்யூட்டர் வைரஸ்கள் போல. எப்போதும் அங்கே இருந்துகொண்டே இருக்கும். சட்டென்று உயிர்வந்து அனைத்தையும் அழித்துவிடும். உப்பிருந்தபாண்டம் என்ரு என் பாட்டி சொல்வார்கள். உப்பு வைக்கப்பட்டிருக்கும் கலம்போல. அஸ்தினபுரியை அது உள்ளிருந்தே அழிக்கிறது

வெங்கட்ராமன்