Thursday, June 14, 2018

காஞ்சிரம்



அன்புள்ள ஜெ

செந்நா வேங்கை 11 - நூறு வயதான முதுபூசகர் செங்கர் காரி மங்கலம் மட்டுமே செய்கிறார், ரத்தச்சடங்குகள் துவங்கும் முன் சென்றுவிடுகிறார். முதுமையைப் பற்றிய முக்கியமான சித்திரம் இது என்று தோன்றுகிறது. முற்றிப்பழுத்த காஞ்சிர மரம்.

அசுர வழக்கப்படி நடைபெறும் திருமணத்தில் சிறுவிரல் பிடித்தல், ஏழு அடி நடத்தல் போன்ற சடங்குகள் வருவது ஆச்சரியமாக இருந்தது. நான் இவை பிற்கால வைதீக சடங்குகள் என்று நினைத்திருந்தேன்.

மதுசூதன் சம்பத்


அன்புள்ள மது

இந்தியாவின் பழங்குடியினரின் மணச்சடங்குகளைப்பார்த்தால் நமது மணச்சடங்குகள் அங்கிருந்து கொள்ளப்பட்டு வைதிகமாக்கப்பட்டவை என்பது தெரியும். தொல்வேதகால மணம் என்பது அருந்ததியைச் சான்றாக்கி வேள்விமுன் அமர்ந்து அவியிடுவதுமட்டுமே என நினைக்கிறேன்

ஜெ