Friday, June 15, 2018

ஆசுரமுறை




ஜெ

காரி மரபினர் ஆசுரமுறைப்படி வேள்விசெய்கிறார்கள். அதிலும் மாண்டூக்யம் வந்துவிடுகிறது. மழையைக் கொண்டுவருகிறது. அது எனக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தாலும் பின்னர் யோசிக்கும்போது இயல்பானதாகவே தோன்றியது. வேதமரபு இங்குள்ள பழங்குடி மரபுகளுக்கு அன்னியமானது அல்ல. பழங்குடிமரபிலிருந்து கிளைத்ததாகவே இருக்கும். ஆகவே வேதச்சடங்குகள் கொஞ்சம் கொஞ்சம் வேறுபாடுகளுடன் எல்லா குடிகளிடமும் இருக்கும். நான் 1970களில் பஸ்தரில் பணியாற்றியபோது அங்குள்ள பழங்குடிமக்கள் வேள்விபோலவே ஒன்றைச் செய்வதைக் கண்டிருக்கிறேன். உணவை தீயில் இட்டு கும்பிட்டு சில சைகைகளைக் காட்டி வழிபடுகிறார்கள் அந்த மக்கள். மாண்டூக்ய ஒலி மழையைக் கொண்டுவருகிறது. அத்துடன் வஞ்சம் முழுமையடைகிறது.

ஜெயராமன்