ஜெ
முதற்கனலில் பால்ஹிகர் சிகண்டியைச் சந்திக்கும் காட்சியில் பித்துப்பிடித்தவராக இருக்கிறார். அவர் நெடுநாட்களாக அந்த கல் அறைகளுக்குள் வெளியுலகமே தெரியாமல் வாழ்கிறார். அவருடைய அந்த பித்தில் அவர் சொல்கிறார். ஒருவன் தன் சகோதரர்களைச் சுமந்துகொண்டு செல்கிறான் என்று. அதுபீமனைப்பற்றிய குறிப்பு. அப்போது பீமன் பிறக்கவில்லை. திருதராஷ்டிரருக்கே திருமணம் ஆகவில்லை. அந்த பித்து விதியை முன்னாலேயே சென்று காணவைக்கிறது. இப்போது அவர் பித்தில் உளறிக்கொண்டிருக்கையில் அடிக்கடி அந்தக்காட்சியைச் சொல்கிறார். அவர் பீமன் கையால் சாகப்போகிறவர். எல்லாமே முன்னரே முடிவாகிவிட்டது என்பதுதான் வெண்முரசின் பூர்வபட்சம். அதன்பிறகு கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறீர்கள்
சாரங்கன்