Wednesday, June 20, 2018

உருமாற்றம்




ஜெ

பால்ஹிகபுரியின் அரசியல்வளர்ச்சி பற்றி வந்த கடிதங்களைப் பார்த்தேன். அந்த நகர்வர்ணனைகளை அங்கே சென்றதுபோல எண்ணிப்பார்த்து ரசித்துக்கொண்டிருந்தமையால் நான் அதைக் கவனிக்கவில்லை. அதன்பின் இந்த நான்கு அத்தியாயங்களையும் வாசிக்கையில் விதவிதமான அர்த்தங்கள் வந்துகொண்டே இருந்தன. ஒரு கட்டத்தில் இதென்ன இவ்வளவு குறியீடு என்று அசந்துவிட்டேன். அந்தச் சாலை. அது கீழிருந்து ஒரு பாம்பு மாதிரி மேலே எழுந்து வருகிறது. [ஹெயர்பின் கர்வ்ஸ்  என்பது தவறு. பாம்புப்பாதை சர்ப்பபதம் என்பதுதான் பொருத்தமாக உள்ளது]


அந்தநகரைச்சூழ்ந்து பூரிசிரவஸ் அளிக்கும் அந்தக்கோட்டை முக்கியமான அடையாளம். அது ஆளும் வர்க்கம், நகர் வர்க்கம் உரூவாவதைக் காட்டுகிறது. அவர்கள் தங்களை ஒதுக்கிக் கொள்கிறார்கள். அரசியரின் மனநிலைகல் அதையே காட்டுகின்றன. காலப்போக்கில் கோட்டைக்கு உள்ளே வாழ்வபர்கள் வெளியே வாழ்பவர்கள் என்ரு இரண்டு வர்க்கம் உருவாகிவிடும். அதேபோல அந்த மாளிகைகள் அமைக்கப்படுவது. அங்கே எதுவுமே நிலையல்ல. ஆகவே தான் அதுவரை நிலையான ஓர் அரசும்கூட உருவாகவில்லை. இப்போது நிலையான ஓர் அரசு உருவாகிவருவதையே சிற்பி மாளிகை கட்டும் காட்சி காட்டுகிறது

செந்தில்