Wednesday, June 27, 2018

வருகை




அன்புள்ள ஜெ

பால்ஹிகரின் அஸ்தினபுரி வருகை நிகழும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் பூரிசிரவஸின் கதையை பால்ஹிக நாட்டுடன் முடித்துவிடுவீர்கள் என நினைத்தேன். பால்ஹிகர் அஸ்தினபுரிக்கு வருவது ஒரு பெரிய நிகழ்ச்சி. கதைப்படி கிட்டத்தட்ட 120 ஆண்டுகளுக்குப்பின்னர் அவர் அங்கே வருகிறார். எல்லாமே மாறிவிட்டிருக்கும். அவரை அவர்களும் அவர்களை அவரும் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்விதான். ஒரு பெரும்மூதாதை உயிருடன் திரும்பி வந்து போரில் கலந்துகொள்ளப்போகிறார். மகாபாரதத்தின் மிகப்பெரிய மேஜிக்கல் ரியலிசக் காட்சி இது. மூலத்திலே ஓரிரு வரிகள்தான் உள்ளன. மிகப்பெரிய கதாபாத்திரமாக நீட்டிவிட்டீர்கள். மகாபாரதம் எழுதிய கோலி உட்பட பிற்கால ஆசிரியர்கள் எவருமே இந்த அளவுக்கு இதையெல்லாம் கவனித்ததில்லை. நாளைவரும் ஒர் எழுத்தாளர் இதைமட்டுமேகூட நல்ல நாவலாக தனியாக எழுதலாம்

சுவாமி