அன்புள்ள ஜெ
பூரிசிரவஸுக்கும் பிரேமைக்குமான அந்த உறவும் அவருக்கும் அவன் மகனுக்குமான உறவும் அற்புதமாக அமைந்துள்ளன. அமுதம் வழியும் மலை என்று பால்ஹிகர் சொல்வது என்ன என்று வாசகர்களுக்குப் புரிகிறது. மீண்டும் மீண்டும் பால்பெருகும் நதிக்கு அப்பால் உள்ள மலையில் இருக்கிறது அந்த இல்லம் என்றே சொல்லப்படுகிற்து. அங்குள்ள ஒவ்வொரு சின்ன தகவலும் சேர்ந்து அங்கெ சென்று வாழ்ந்து மீண்ட அனுபவத்தை வாசகனுக்கு அளிக்கிறது. அற்புதமான ஒரு பகுதி அது
பூரிசிரவசின் மகனுக்கும் அவனுக்குமான சண்டையும் ஒரு குறியீடுபோல் இருந்தது. ஆற்றலின் மீது அல்ல திறமையின்மீதுதான் ஊரிலே அனைத்தும் கட்டப்பட்டுள்ளது. யானையை சிறிய நாகம் கொன்றுவிடும். ஆகவேதான் நீ ஊருக்கே வராதே என்று அவனிடம் சொல்கிறார் பால்ஹிகர்
நன்றி
விஜய்குமார்