Monday, June 25, 2018

அமுதம் பொழியும் மலைமுடி




ஜெ


போர் மூண்டுவரும் சூழலில் இவ்வளவு விரிவாக இமையமலைமுடியும் பால்ஹிகரும் பிரேமையும் எல்லாம் ஏன் வருகிறார்கள் என்ற எண்ணம் எனக்கு உண்டு. நான் என் அம்மாவிடம் வெண்முரசு பற்றிப் பேசுவதுண்டு. நேற்று பேசிக்கொண்டிருந்தபோது அம்மா சொன்னார்கள் எல்லாரும் சாகப்போகிறார்கள். ஆகவே சாவில்லாத ஒரு இடத்தை கொண்டுவந்து நிறுத்துகிறீர்கள் என்று. எனக்கு ஆச்சரியம். அம்மாவுக்கு 82 வயது. அவர்களுக்கு இது தோன்றியிருக்கிறது. 

அமுதம் பொழியும் மலைமுடி என்றும் ஒளியே அணையாத மலைமுடி என்றும் வந்துகொண்டே இருக்கிறது. அமுதவெளியான ஒரு மலைமுடி தலைக்குமேல் இருக்கிறது. ஆனால் மனிதர்கள் குருக்ஷேத்திரத்தில் போர் செய்து செத்துவிழப்போகிறார்கள். பால்ஹிகரே கேட்கிறார். எதற்குப்போர் என்று. நிலம் என்றால் இங்கே இவ்வளவு நிலம் இருக்கிறதே என்கிறார். கீழே நிகழும் போருக்கு முழு காண்டிராஸ்ட் ஆக உள்ள ஒரு நிலத்தைத்தான் வெண்முரசு காட்டிக்கொண்டிருக்கிறது. போர் வர வர இந்த நிலத்தை நினைத்து நாமெல்லாம் ஏங்குவோம் என நினைக்கிறேன்

ராஜ்