அசங்கனும் சௌம்யையும் கொள்ளும் காதல் அழகான ஒரு பாவனை. ரெண்டுபேருக்குமே தெரியும் அவர்களுக்கு அருகே சாவு இருக்கிறது என்று. ஆகவேதான் அந்த உறவு அவ்வளவு ஆத்மார்த்தமானதாக அமைந்திருக்கிறது. நீண்டவாழ்க்கை இருக்கிறது என்று பார்க்கும்போது எதிர்காலம் பற்றிய கவலையே ஜாஸ்தி. அது நிகழ்காலத்தை அர்த்தமில்லாமல் ஆக்கிவிடும்.முதலிரவில் முழுக்க எதிர்காலத் திட்டங்கள் பற்றியே பேசிக்கொண்டிருப்பவர்களே மிகுதி. நாளையே சாவு என்னும்போது ஒவ்வொரு கணமும் ஆழ்ந்த அர்த்தமுள்ளதாக ஆகிவிடுகிறது
பாஸ்கர்