Thursday, October 4, 2018

லட்சுமணனின் துயரம்




ஜெ


லட்சுமணனின் துயரம் மனதை என்னவோ செய்தது. ஆயிரம் பேருக்கு மூத்தவன் என்றால் அது என்ன ஒரு பெரிய கொடுப்பினை. ஆனால் அது போர்க்களத்தில் என்றால் ஆயிரம்தடவை சாவதுபோலத்தான். வெறும் எண்ணிக்கையாகவே வந்துகொண்டிருந்தவர்கள். தனிமுகமே இல்லை அவர்களுக்கு. அதுவே துயரமானது. அவர்கள் சாகும்போது ஆயிரம்பேருக்குமே அது சாவுதான்.

லட்சுமணனின் மனநிலையும் துக்கமும் மிகநுட்பமாகச் சொல்லப்பட்டிருந்தன. துரியோதனனைப்போலவே அவனுக்கும் தம்பி துருமசேனன்தான் அணுக்கமானவன். அவனும் தம்பியும் பேசிக்கொள்ளும் இடம் எல்லாம் அவ்வளவு ஆதுரமாக உள்ளது.  சாவு வீட்டுக்குச் செல்பவர்கள் குளிப்பது சாவு தொடர்ந்து வந்துவிடக்கூடாது என்பதற்காக. போர்க்களத்தில் குளிக்கவேண்டியதில்லை, சாவு எப்போதுமே உடனிருக்கிறது என்ற புரிதல் ஆழமானது. அதை ஒரு வேடிக்கையாக கசப்புடன் அவன் சொல்கிறான்

சரவணன்