Thursday, October 4, 2018

வெண்முரசின் கட்டமைப்பு குறித்து



வெண்முரசின் கட்டமைப்பு

அன்புள்ள ஜெ,


வெண்முரசின் கட்டமைப்பு குறித்த டி.நாகராஜன் அவர்களின் கட்டுரை வெண்முரசின் ஒட்டுமொத்தமாகத் தொகுத்தளிக்கும் பார்வைகளில் முக்கியமானது. இக்கட்டுரையில் என்னை மிகவும் ஈர்த்தது அவர் தனது தொழில் (கட்டடவியல் அவரது துறை எனக் கணிக்கிறேன்...) அறிவு சார்ந்து அவர் அடைந்த ஒரு தரிசனத்தில் இருந்து முளைத்தெழுந்த ஒரு தனித்துவமான பார்வை தான். வெண்முரசில் பல கதாபாத்திரங்கள் தமது தொழிலில் சிறந்தவர்களாயிருந்துஅதிலிருந்து பெற்றுக் கொண்ட ஒரு அறிதலைக் கொண்டுஇவ்வாழ்வைஇப்புடவியைபரப்பிரம்மத்தைக் கூட விவரிக்கும் பல சந்தர்ப்பங்களை நாம் கண்டுள்ளோம். அதிரதன் (வண்ணக்கடலில் கர்ணனுடன் அவர் குதிரை வளர்ப்பும்மேய்ப்பும் குறித்து பேசும் உரையாடல்)பீமனின் அடுமனை குரு துவங்கி தற்போதைய காவலரான சுவீரர் வரை பல உதாரணங்கள் உள்ளன. இவர்கள் அனைவருமே தமது செயலில் இருந்து தாம் அடைந்த அறிதலை முதலாகக் கொண்டு உலகை அளந்தவர்கள் தாம். அதிலிருந்து மேலே சென்றவர்கள் குறைவு என்றாலும்!!


“கட்டிடவியல் கலையில் ஒரு கட்டிடம் என்பது இடம்அல்லது வெளி விடும் சவாலை சரியான முறையில் எதிர்கொள்ளும் ஒரு solutionனாகக் கருதப்படுகிறது” என்ற கண்டடைதலில் இருந்து அவர் நவீன நாவல்களை அணுகுயிருக்கும் விதம் தனித்துவமானது. வெண்முரசின் கட்டமைப்புகள் என அவர் குறிப்பிட்டுள்ள ஐந்து தளங்களும் முக்கியமானவை. அவற்றில் நான்கு தளங்கள் பற்றி பல உரையாடல்களை சென்னை கூட்டத்தில் பேசியிருந்தாலும், அவற்றைத் தொகுத்து ஒரு பார்வையாகக் கண்டது நிறைவைத் தந்தது. இக்கட்டுரை குறிப்பிடும் fractal குறித்த அம்சம் புதியது. எத்தனை படித்தாலும் புதிய ஒருவர் வந்து திறக்க இன்னும் இன்னும் பல சாளரங்களும், கதவுகளும் கொண்ட பெரும் அரண்மனை அல்லவா வெண்முரசு... அருமையான வாசிப்பை முன்வைத்திருக்கும் நாகராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்களும்நல்வரவும். தொடர்ந்து எழுத வேண்டும் என ஒரு வேண்டுகோளும்!!!

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்