அன்புள்ள ஜெ ,
தருமன் குறித்த உங்களின் அவதானிப்பு அற்புதம். அறம் எது என்பது குறித்த உள்ளார்ந்த சஞ்சலங்கள் இருந்தாலும் அறம் என்னும் லட்சியத்தின் மீது மாறாத பற்றும் பிடிப்பும் கொண்ட ஒரு மாமனிதன் தருமன். காந்தியுடன் தருமனை ஒப்பிட்டு வந்த பல கடிதங்களை நீங்கள் தளத்தில் வெளியிட்டுள்ளீர்கள். தருமன் குறித்த வர்ணனைகளில் ராஜாஜியினுடையது எனக்கு மிகப்பிடித்தமானது. யக்ஷனின் கேள்விகளுக்கு பதிலளித்த பின் நகுலனை வரமாக கேட்கும் தர்மன், அதற்கு அளிக்கும் விளக்கம் - " யக்ஷனே , தருமமே மனிதனைக் காக்கிறது. பீமனுமல்ல , அர்ஜுனனுமல்ல... "
பல நாட்கள் என்னை கொந்தளிக்க வைத்த வரி இது.