Saturday, February 6, 2016

காவலும் மக்களும்






ஜெ

அஸ்தினபுரியிலும் வெண்முரசிலும் வந்துகொண்டே இருக்கும் காவல்மாடங்களைப்பற்றித்தான் நினைத்துக்கொண்டே இருந்தேன். அவையெல்லாம் தலைக்குமேல் எழுந்து அந்தமக்களைப் பார்த்துக்கொண்டே இருக்கின்றன. தெய்வங்கள் பார்ப்பதுபோல. அவர்கள் எதையும் சுதந்திரமாக எண்ண முடியாது. வாழமுடியாது

அவர்கள் நாவலுக்குள் வருவதெல்லாமே அவர்கள் விழாக்களில் களியாட்டமிடும்போதும் வாழ்த்துக்களைக் கூவும்போதும் மட்டுமே. மற்றபடி அவர்கள் தனிநபர்கள். அவர்கள் அங்கே உண்மையில் இல்லை. இன்றைக்கும் அப்படித்தானே?

திருவிழாக்களை அவர்கள் ஏன் விரும்புகிறார்கள்? கண்காணிப்புக்கொபுரங்கள் இல்லாமலாகின்றன. தெய்வங்கள் கூடவே இறங்கி ஆடுகின்றன. மேலே இருந்து பார்ப்பதில்லை

செம்மணி அருணாச்சலம்