ஜெ
வெண்முரசின் கதை
இந்திரப்பிரஸ்தத்த்தை நோக்கிச்செல்லும்போது ஒரு பெரிய சோர்வு வந்து மூடுகிறது. இது
எங்கே செல்கிறது, என்ன ஆகப்போகிறது என்ற புரிதல் வந்துவிடுகிறது. மலையாளத்திலே மக்களையும்
மாம்பூவையும் பார்த்துச் சந்தோஷப்படக்கூடாது என்று ஒரு பழமொழி உண்டு. மாம்பூ பூத்ததுமே
ஒரு மழைக்காற்று அடிக்கும். நம் ஊரில் அது வழக்கம் நூறு கௌரவர்களும் ஆயிரம் பேரன்களுமாக
நின்றிருக்கும் திருதராஷ்டிரரைப்பார்க்கும்போது அதுதான் மனதில் தோன்றியது
மெல்லமெல்ல நாம்
விரும்பாத விஷயங்கள் வந்து சேர்கின்றன. கிரேக்கத்தொன்மங்களில் எல்லா தெய்வங்களும் சங்கிலிகளில்
கட்டப்பட்ட்வை என்பார்கள். அதேபோலத்தான் மகாபாரதமும் என்று நினைத்தேன்
சதீஷ்