Thursday, July 16, 2020

நேரலை நிகழ்வு



அன்பின் ஜெ,

இவ் வருட குரு பூர்ணிமையும்நேரலை நிகழ்வும் அரிய,  இனிய ஒன்று. நான் காலையில் you tube live லும்  மாலையில் Zoom நேரலையிலும் கலந்துக் கொண்டேன். வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கென தனி நேரம் ஒதுக்கியது மிகவும் வரவேற்க்கத்தக்கது. ஒரு படைப்பின் வெவ்வேறு அர்த்தங்களை அதன் ஆசிரியரிடம் கேட்டு அறிந்துக்கொள்ளக் கூடாதாயினும் "வெண்முரசு" போன்ற பெரும் காவியத்தைப் புரிந்துக் கொள்ள ஆசிரியரின் வழிகாட்டுதல் அவசியமாகிறது. இனி வாசிப்போருக்கும்இக்காணொளித் தொகுப்புகள்வெண்முரசு குறித்த விளக்கங்களை அளிக்கக்கூடும்.

எங்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் உங்களின் பொறுமையான விளக்கமும்அதில் வெளிப்பட்ட‌ உங்கள் ஞானத்தின் கீற்றும்வழிகாட்டலும்பரவசத்திற்கும்பாராட்டுதலுக்கும் பதிலான உங்களின் புன்னகையும்,  குருவை முன்னிறுத்தியதும்நாளின் பெரும் பகுதியை செலவிட்ட போதிலும் வெளிப்பட்ட குன்றா உற்சாகமும்நட்பும் நிறைந்த உங்களின் ஆளுமை அனுகும்தோறும் பேருரு கொள்ளும் மாமலை போல.

இதை ஒருங்கிணைத்த நண்பர்கள் திரு ராஜகோபாலன் (ஜாஜா)சந்தோஷ் [லாஓசி]காளிஅரங்கசாமி மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.  தளத்தில் பெயர்களாக மட்டும் அறிந்தவர்களைக் காணவும் வாய்ப்புக் கிடைத்தது.

உங்கள் எழுத்தை வாசிக்கும்தோறும், வாசகனாக, என் வாழ்வின் அன்றாடங்களும்சாதாரணங்களும் பொருள் கொள்கின்றன. ஒளி கொண்டவை மென்மேலும்‍‍‍‍ ஒளிர்கின்றன -குரு பூர்ணிமை நிலவு போல.

ஆசிரியருக்கு நன்றி

-கணேசமூர்த்தி.