Sunday, July 19, 2020

நீலம்



ஜெ, 

நீலத்தில் நான்கு அத்தியாயங்கள் படிக்க விட்டுவிட்டேன். வெண்முரசு முடிந்ததும் அதை முடித்துவிட எண்ணி புத்தகத்தை எடுத்தேன். விட்ட இடம் தேடி பக்கங்களை புரட்ட ஒவ்வொன்றும் இதுவே இதுவே என்று தோன்ற வைத்தது. தேடுவதை நிறுத்திவிட்டு கை தொட்ட பக்கத்தை படிக்கத் தொடங்கினேன். எப்பக்கம் எடுத்தாலும் மதுரம்! மதுரம்! ராதையாய், யசோதையாய், நந்தனாய், அக்ரூரனாய், ஆயனாய், ஆய்ச்சியாய், கோபனாய், கோபியாய், இன்னும் பலராக, பலவாக நானே நிரைகொண்டேன். பித்து தலைக்கேறி பிச்சியாய் ஆகிப்போனேன். படிக்கும் பித்தே தலை சுழற்றும் என்றால் எழுதிய பித்து என்னென்ன செய்திருக்கும்! அப்பித்திலிருந்து மீண்டு இன்னும் ஒரு இருபத்தியிரண்டு

எப்படி எழுதினீரோ!

அதை அன்றன்று படித்திட எமக்களித்தீர் – இதனை

எப்படி எழுதினீரோ!

கற்பதில் திளைப்பவர் கடிதென திகைப்பவர்

குற்றம் உரைப்பவர் கூடி விவாதிக்க – இதனை

எப்படி எழுதினீரோ!

சுதா