Wednesday, July 15, 2020

நஞ்சு தடவிய சொற்கள்



ஜெ

வெண்முரசில் சில இடங்கள் உதிரியாக வந்து சம்பந்தமில்லாமல் கிடக்கும். அவற்றைப் புரிந்துகொள்வது கடினம். கனகர் கங்கைக்கரைக்குச் செல்லும்போது ஒரு கிறுக்குச் சூதர் உளறும் ஓர் இடம் உண்டு நஞ்சு தடவிய சொற்கள் அவை

பல்லாயிரம் பேரின் காமச்சிற்றுறுப்புகள்பல லட்சம். அவற்றை மட்டும் வெட்டிக் கொண்டுவந்திருக்கலாம். அவற்றை இந்நகரில் நடலாம். கருணைக்கிழங்கின் முளைக்கண் போன்றவை அவை. இங்கே அவை முளைத்தெழும். நான் அறிவேன், அகன்ற தளிரிலைகளுடன் அவை முளைக்கும். கருணைக்கிழங்கின் தண்டுபோலவே இருக்கும். ஆனால் கரியவைஅவை பெருமரங்களாக இந்த நகரில் பெருகி நிழல் பரப்பும்.

இந்தவரிகளை திரும்பத்திரும்ப படித்துக்கொண்டிருந்தேன். காம உறுப்புகள் பாதாள தெய்வங்களுக்குரியவை, அவற்றைப்பிடித்து மனிதர்களை எளிதில் தூக்கி எடுத்துவிடலாம் என்று அவர் சொல்கிறார். என்ன உத்தேசிக்கிறார், அதைக்கேட்டு கனகர் ஏன் பதற்றம் அடைகிறார் என்று புரியவில்லை. ஆனால் நிலைகுலையச்செய்யும் வரிகள் இவை

ராம்