Saturday, July 18, 2020

கண்ணன் பிள்ளைத்தமிழ்


அன்புள்ள ஜெ

கண்ணன் பிள்ளைத்தமிழ் நவீன இலக்கியத்தில் மரபின் ஊடுருவல். ஒருபக்கம் அதன் அழகான மரபுத்தொடர்ச்சி. மறுபக்கம் அதன் நவீனத்தன்மை புதுக்கவிதையிலிருந்து வந்தது

 

முகிழ்த்த வேதமுதற்சொல்.

இது அறிதற்கொண்ணாது

ஆயிரம்கோடி அருந்தவ முனிவரை

அகற்றும் பெருஞ்சுடர்.

அள்ளி முலையோடணைத்து

சின்னஞ்சிறு பண்டி தடவி சிரித்துக்

குழையவைக்கும் அன்னையர்

கைவிரல் கணையாழியின் சிறு மின்னொளிச்சுடர்.

களியாடும் கன்னியர் தோழியர்

கையிலெடுத்து கழற்சியாடும் மாமலை.

கண்ணனின் நாவிலெழும் முதற்சொல் வேதமுதற்சொல். அது அருந்தவ முனிவர் ஆயிரம்கோடி தவம்செய்தாலும் அறியமுடியாது. அன்னையரின் கையில் கணையாழியின் ஒளிபோல புழங்குவது. கன்னியரான தோழியர் கையிலெடுத்து கழற்றிக்காய் விளையாடும் மலை அவன். அழகான படிமங்கள்

எஸ்.சிவக்குமார்