Monday, July 27, 2020

விண்



அன்புள்ள எழுத்தாளார் ஜெயமோகன் அவர்களுக்கு 

வணக்கம் ஜெய மோகன் அவர்களே தங்களின் வெண்முரசுவில் பல இடங்களில் நாம் விண்ணில் சந்த்திப்போம் .அங்கு பகைமைகள் ,கீழ்மைகள் ,வஞ்சங்கள் ,பழிச்சொற்களை மறந்து நட்பு பாராட்டுவோம் .தோளோடு தோள்சேர்த்து தழுவி கொள்வோம் என வரிகள் வரும் .உதாரணத்திற்கு ஜராசந்தனை பீமன் கொன்ற பிறகு ,சிசுபாலன் வதம் பிறகு ,பீமன் மகன் கடோதகஜன் அலம்புசனை கொன்ற பிறகு,துரோணர் துருபதனை கொன்ற பிறகு என்று .ஆதலால் தான் இதனை எழுத விரும்பினேன் .விண்ணில் சந்திப்போம் துயர் நீக்குவோம் என்று சொல்லாத வெண்முரசு கதை மாந்தர் இல்லை இது எனது தாழ்மையான  கருத்து .ஆதலால் தான் தருமர் மாண்டவர்கள் அனைவரையும் விண்ணில் சந்திக்கும் காட்சியை -குறிப்பாக கர்ணனை அர்ஜுனன் சந்திக்கும் காட்சி என விரிவாக வந்திட விருப்பு கொண்டேன் .இது உங்களால் மட்டுமே முடியும் .இதனை சாத்தியமாக்க உங்களை வேண்டி கொள்கிறேன் .

இப்படிக்கு
தி செந்தில்
ஸ்ரீவில்லிபுத்தூர்