Wednesday, July 22, 2020

சார்வாகம்



ஜெ

களிற்றியானைநிரையின் 74 ஆவது அத்தியாயம் சார்வாக தரிசனத்தின் மிக உணர்ச்சிகரமான உத்வேகமான ஆனால் சுருக்கமான வெளிப்பாடு முழுக்கமுழுக்க கவித்துவத்தாலேயே சொல்லப்பட்டிருக்கிறது இந்தப் பகுதி. இது ஏற்கனவே திசைகளின் நடுவே என்ற கதையில் வெளிவந்ததுதான் என்றாலும் இப்படி விரிவாக அந்தக் கதையில் இல்லை.

சார்வாகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இந்த ஒரு அத்தியாயத்தைக்கொண்டே சொல்லிவிடலாம். இன்பம் ஒன்றே புருஷார்த்தம் என்று மட்டும் அவர்கள் சொல்லவில்லை. அது எப்படி சுரண்டலுக்கு எதிரான ஆயுதமாக ஆகும் என்றும் சொல்கிறார்கள்
அதிலும் அந்த யானையை சொல் கட்டிவைத்திருக்கும் உவமை மிகமிக வலிமையானது.

மகிழ்ந்திருங்கள். மானுடன் மகிழ்வதையே இங்குள்ள அனைத்தும் விரும்புகின்றன என்று உணருங்கள். இல்லையேல் நீரில் தண்மையும், காற்றில் நறுமணமும், கனிகளில் இனிமையும், அன்னத்தில் சுவையும் அமைந்திருக்காது. விண்ணிலிருந்து ஒளி மண்மேல் பொழிந்திருக்காது. வண்ணங்களும் வடிவங்களுமென இப்புடவி பெருகி நம்மை சூழ்ந்திருக்காது. அறத்தின்பொருட்டு இன்பத்தை இழந்தோர் அறத்தையும் இழந்தவரே. 

சாரங்கன்