Monday, May 13, 2019

வில்



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

துச்சாதனனின் நெஞ்சைப் பிளந்த பீமன் அவன் குருதிகொண்டு காட்டு வழி செல்ல தூமவர்ணி எனும் அன்னைக் குரங்கு பதைக்கிறது.  பின் குழந்தை குரங்குகளுக்கு வால்மீகி முனிவரின் கதை சொல்கிறது.  அவர் வாழ்க்கையுடன் பீமனுடையது பொருந்தும் இடம் தொடப்படுகிறது.  மற்றொரு வகையில் பேரருளைத் துணைக்கொண்டு முனிவரென்றாகிய வால்மீகியைப் போலல்லாமல் பீமன் தவறினான் என்று எண்ணம் மனதில் எழ கதை முழுவதும் அறியாமல் கருதக்கூடாது என்று எண்ணுகிறேன்.  அறங்களில் தோதான இடங்களைத் தெரிவு செய்து அகந்தை நடத்தும் விளையாட்டுகள்தாம் எத்தனை! ”நீயேதான் எல்லாவற்றிற்கும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.  தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்பவையே அகந்தையிலிருந்தும் எல்லா அறக்குழப்பங்களில் இருந்தும் விடுபடுட்டு திருப்பம் கொள்ள, மெய்மையில் அமைவுபெற எக்காலத்தும் தரப்படும் பதில்கள் போலும்.



அன்புடன்,
விக்ரம்,
கோவை