அன்பின் ஜெ,
குருஷேத்திர பதினேழாம் நாள் புலரியில் அடுமனை கலங்களில் கொதிக்கும் தண்ணிரில் கூலங்கள் கொட்டப்படுகையில் மரக்காலால் எண்ணிக்கொட்டுகிறார்கள் அடுமனை பணியாளர்கள்.
//
கூலங்களை மரக்காலால் அள்ளி நீரிலிட்டனர். “ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து பத்திற்கொன்று பத்திற்கொன்று… ஒன்று இரண்டு மூன்று” என்று கூலம் அள்ளியிடும் சூதர்கள் கூவும் ஒலிகள் எழுந்தன.
//
எங்கள் வீட்டு வயல்களில் அறுவடை காலங்களில் நெல்மணிகளை சாக்குமூட்டைகளில் மரக்காலால் அள்ளிக்கொட்டுகையில் 'ஒண்ணு,ரெண்டு...." என்று ஆரம்பித்து "பத்து.... பத்து..... பத்து....." என்று சொல்நிறுத்தி மீண்டும் "ஒண்ணு" என்று ஆரம்பிப்பார்கள்.
யுகங்கள் கடந்த மரக்காலும்,சொல்வழக்கும் வெண்முரசை புலரியில் படிக்கையில் சிலிர்க்க வைக்கிற்து.
-யோகேஸ்வரன் ராமநாதன்.